சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இங்கிலாந்து அணி இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அப்கானிஸ்தான் அணி இப்ராஹிம் சத்ரானின் சதத்தின் உதவியுடன் 50 ஒவர்கள் நிறைவில் 325 ஓட்டங்களைக் குவித்தது.
அதன்படி 326 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 317 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் தொடர்ச்சியான 2 தோல்விகளைச் சந்தித்த இங்கிலாந்து அணி குறித்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.