இங்கிலாந்தின் மான்செஸ்டரில் முகாமிட்டிருந்த புலம்பெயர்ந்தோரை அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள்.
புலம்பெயர்ந்தோரை அப்புறப்படுத்திய அதிகாரிகள்
இங்கிலாந்தின் மான்செஸ்டரிலுள்ள செயின்ட் பீற்றர் சதுக்கத்தில் முகாமிட்டிருந்த வீடற்றோர் பலரை அதிகாரிகள் நேற்று காலை அப்புறப்படுத்தினார்கள்.
அவர்களுடைய உடைமைகளை வைப்பதற்காக பிளாஸ்டிக் பைகள் கொடுக்கப்பட்டன.
நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்ற அதிகாரிகள், அந்த புலம்பெயர்ந்தோரை அப்புறப்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விடயம் என்னவென்றால், அதிகாரிகள் செயின்ட் பீற்றர் சதுக்கத்தில் முகாமிட்டிருந்தவர்களை அப்புறப்படுத்த, சிறிது நேரத்துக்குள், சற்று தொலைவில் சிற்றி சென்டரிலுள்ள Midland ஹொட்டலுக்கு வெளியே அவர்கள் மீண்டும் புதிய முகாம்களை அமைக்கத் துவங்கிவிட்டார்கள்.