Saturday, May 3, 2025
HomeMain NewsMiddle Eastபாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவதை அடுத்து இஸ்ரேல் பணயக்கைதிகள் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்

பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவதை அடுத்து இஸ்ரேல் பணயக்கைதிகள் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்

இஸ்ரேல் சிறையில் இருந்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவதை ஒட்டி ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற பணயக்கைதிகளில் நான்கு பேரின் உடல்களை நேற்று ரெட் கிராஸிடம் ஒப்படைத்தது.

ரெட் கிராஸிடம் ஹமாஸ் நான்கு பேரின் உடல்களை ஒப்படைத்ததை இஸ்ரேல் பாதுகாப்பு துறை அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார். எகிப்து இடைத்தரகர்கள் உதவியோடு நான்கு பேரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. நான்கு பேரை அடையாளம் காணும் பணிகள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

நான்கு பேரின் உடல்கள் வழங்கப்பட்ட அதே நேரத்தில் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளை ரெட் கிராஸ் வாகனம் ஏற்றிவந்தது. பாலஸ்தீனர்கள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர்களது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெய்துனியாவில் கூடினர். ரெட் கிராஸ் வாகனம் தங்களை நோக்கி வருவதை கண்ட அவர்கள் கைத்தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்கும் முறையை கண்டித்து பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்த ஹமாஸ், இது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என தெரிவித்தது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments