முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெலிகம, பெலேன பகுதியிலுள்ள ஒரு உணவகத்துக்கு அருகில் முன்னதாக 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள வீடு உட்பட நான்கு வீடுகள் நேற்று (28) சோதனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் அந்த வீடுகள் எவற்றிலும் இருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையிலேயே அவருக்கு இவ்வாறு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
