இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “ஆசீர்வதிக்கப்பட்ட ரம்ஜான் மாதம் தொடங்கும்போது, அது நமது சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும்.
இந்த புனித மாதம் பிரதிபலிப்பு, நன்றியுணர்வு மற்றும் பக்தியை எடுத்துக்காட்டுகிறது, மேலும் இரக்கம், கருணை மற்றும் சேவையின் மதிப்புகளையும் நமக்கு நினைவூட்டுகிறது. ரம்ஜான் முபாரக்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கு இஸ்லாமியர்கள் உணவு உட்கொண்டு ரமலான் நோன்பை தொடங்கினர்.