2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குரிய அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்துக்குப் பிரவேசிப்பதன் ஊடாக பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அனைத்து அரச பணியாளர்களும் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் எந்த காரணத்துக்காகவும் விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்படமாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.