அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ, அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தீயை அணைக்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காட்டுத்தீயினால் சுமார் 4000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி 2000க்கும் மேற்பட்ட மக்கள் தமது குடியிருப்புக்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.