Thursday, April 17, 2025
HomeMain NewsTechnologyடிக்டாக் மீதான தடை : மெட்டா உருவாக்கும் புதிய திட்டம்!

டிக்டாக் மீதான தடை : மெட்டா உருவாக்கும் புதிய திட்டம்!

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், குறுகிய வீடியோக்களை விரும்பும் பயனர்களை கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ செயலியை தனி பயன்பாடாக வெளியிட திட்டமிட்டுள்ளது.

டிக்டாக்கிற்கு தடை, புதிய செயலி அறிமுகம்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட டிக்டாக் செயலிக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்துள்ளன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் பிரபலமான ‘ரீல்ஸ்’ வீடியோ அம்சத்தை தனி செயலியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மோசேரி மற்றும் அவரது குழுவினர் இந்த புதிய செயலி மற்றும் அதன் அம்சங்கள் குறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

டிக்டாக் அமெரிக்காவில் தனது செயல்பாடுகளை தொடர போராடி வரும் நிலையில், மைக்ரோசாஃப்ட் அல்லது எலான் மஸ்க் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் டிக்டாக்கை நிர்வகிக்க முன்வந்துள்ளன.

இந்தியாவிலும் டிக்டாக் தடை செய்யப்பட்டதால், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் போன்ற குறுகிய வீடியோ தளங்கள் பிரபலமாகி வருகின்றன.

மெட்டா நிறுவனம் ஏற்கனவே 2018-ல் ‘லாஸ்ஸோ’ என்ற குறுகிய வீடியோ செயலியை வெளியிட்டது. ஆனால், அது டிக்டாக்கிற்கு போட்டியாக அமையவில்லை.

தற்போது, மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற பல்வேறு செயலிகளில் ரீல்ஸ் அம்சத்தை வழங்கி வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செயலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஆனால், அடுத்த சில மாதங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments