உலகம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் ரமலான் நோன்பு தொடங்கியிருக்கிறது.
ரமலான் பண்டிகையின்போது கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை 30 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள்.
அந்தவகையில், இவ்வாறு 30 நாட்களுக்கு நோன்பு இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்று பார்ப்போம்.
நோன்பு இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
நீங்கள் ஒரு நாளில் கடடைசியாகச் சா ப்பிட்டதில் இருந்து, உங்கள் உடல் உண்ணாவிரத நிலைக்குச் செல்ல எட்டு மணிநேரம் வரை ஆகும்.
இது உங்கள் குடல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்.
இதற்கு பிறகு, நமது உடல் ஆற்றலை பெற கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கப்பட்ட குளுக்கோஸை நாடுகின்றது.
பின்னர் உண்ணாவிரதத்தின்போது, குளுக்கோஸின் சேமிப்பு தீர்ந்துவிட்டால், நம் உடலில் உள்ள கொழுப்பு நம் உடலுக்கான சக்தியாக மாறும்.
நோன்பு இருப்பதால் உடலில் உள்ள கொழுப்பு குறையும். இதனால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மேலும், நீரிழிவு அபாயம் குறைகிறது. இருப்பினும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால் பலவீனம் அதிகரிக்கும். தலைச்சுற்றல், குமட்டல், வாய் துர்நாற்றம் போன்றவை ஏற்படும். அப்போது பசி அதிகரிக்கும்.
இந்நேரத்தில் குடிக்கும் தண்ணீரை சிறந்த இடைவெளியில் எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில் அது வேர்வையாக சுரந்து உடல் சோர்வடையும்.
உடலிற்கு சம அளவிலான சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவினை எடுத்துக்கொள்ளவும்.
மேலும், நோன்பு மூலம் நோய் தொற்றுக்கு எதிராக போராடுவது, அவற்றிலிருந்து குணமடைவது போன்ற நன்மைகள் கிடைக்கும்.
நோன்பு முடியும் நேரத்தில், உறுப்புகளின் செயல்பாடு அதிக திறன்களுக்கு திரும்பும். மேலும், நினைவாற்றல் மேம்படும்.
நோன்பு இருப்பது உடல் நலத்திற்கு நல்லதாக இருந்தாலும் ஒரு மாதத்திற்கு மேலாக நோன்பு இருப்பது உடல் நலத்திற்கு ஏற்றதல்ல.