இந்திய மாநிலம் தெலங்கானாவில் இளைஞர் ஒருவர், சொத்து தகராறில் தாயை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலங்கானாவின் தெல்லாப்பூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கார்த்திக். மதுபோதைக்கு அடிமையான இவர், தனது செலவுகளை சமாளிக்க சொத்தில் பங்கு வேண்டும் என பெற்றோருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற கார்த்திக், தனது தாயார் ராதிகாவை (52) எட்டு முறை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் நிலைகுலைந்த சரிந்த ராதிகா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு பலமணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.