Friday, May 23, 2025
HomeMain NewsEuropeமரண தண்டனை தொடர்பில் ட்ரம்பின் முடிவு : சுவிட்சர்லாந்து கவலை..!

மரண தண்டனை தொடர்பில் ட்ரம்பின் முடிவு : சுவிட்சர்லாந்து கவலை..!

சில குறிப்பிட்ட குற்றச்செயல்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் ட்ரம்ப் அரசு எடுத்துள்ள முடிவு குறித்து சுவிட்சர்லாந்து கவலை தெரிவித்துள்ளது.

பொலிசார் போன்ற அரசு அதிகாரிகளை கொலை செய்தல் மற்றும் பயங்கர குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆவணங்களற்ற நபர்களுக்கு மரண தண்டனை விதிக்க அட்டர்னி ஜெனரல் அழைப்பு விடுக்கவேண்டும் என்று கூறும் அரசாணை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் ட்ரம்ப்.

அத்துடன், ஃபெடரல் மட்டத்தில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் ரத்து செய்துவிட்டார் ட்ரம்ப்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் மனித உரிமைகள் பிரிவைச் சேர்ந்த Tim Enderlin, மரண தண்டனை என்பது, மனித உரிமைகளுக்கு எதிரிடையானது என்றும், சிறைத் தண்டனைக்கு பதிலாக மரண தண்டனை விதிப்பதால் குற்றச்செயல்கள் குறைந்துவிடும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து, நீண்ட காலமாகவே மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், மரண தண்டனையை ஒழிக்க போராடியும் வருவது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments