அமெரிக்க ஜனாதிபதியின் கடுமையான வரிகளை விமர்சித்த கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, இது மிகவும் முட்டாள்தனமான செயல் எனவும் விமர்சித்துள்ளார்.
அத்துடன் தங்களது பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக இடைவிடாது போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அத்துடன் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கான வரியையும் அவர் அதிகரித்துள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதாக கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பில் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கான வரி அதிகரிக்குமாயின் அதற்கு நிகராக தங்களது தரப்பினாலும் வரி அதிகரிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ‘கனேடிய பொருளாதாரத்தின் மொத்த சரிவுக்குத் திட்டமிடுவதாக’ கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.