யாழ்ப்பாணம், தென்மராட்சி – சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த செல்வன். அமிர்தநாயம் றொபின்சன் அவர்கள் 2024 தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட கிராமிய இசைப் போட்டியில் தேசிய ரீதியாக வெற்றியீட்டியுள்ளார்.
அந்தவகையில், நாளை (6) அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற விருது வழங்கல் விழாவில் இளம் கலைஞர் விருதினைப் பெறவுள்ளார்.
நாளை நடைபெறவிருக்கும் விருது வழங்கல் விழாவில் யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் இருந்து றொபின்சன் அவர்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.