கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தக கட்டடமொன்றில் இன்று (5) தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
புறக்கோட்டை பேங்ஷோல் வீதியில் உள்ள கடை ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை அணைப்பதற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.