இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இருபதுக்கு இருபது தொடரில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி சார்பாக அசேல குணரத்ன 64 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.