Wednesday, April 16, 2025
HomeMain NewsSri Lankaசர்வதேச மகளிர் தினம் இன்று!

சர்வதேச மகளிர் தினம் இன்று!

சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தினர்.

ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் போன்ற விடயங்களை அவர்கள் வலியுறுத்தினர்.

பிரான்ஸ் மன்னரின் மாளிகைக்கு முன்னால் ஒன்று திரண்ட பெண்களை அச்சுறுத்திய இரண்டு காவலர்கள் பெண்களால் கொலை செய்யப்பட்டனர்.

தொடர்ந்து பெண்கள் நடத்திய போராட்டத்தின் நிமித்தம், மன்னர் லூயிஸ் பிலிப் பதவியிலிருந்து விலகினார்.

இதனை அடுத்து பிரான்ஸ் பெண்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ஐரோப்பா முழுவதும் ஆதரவு பெருகியது.

ஒஸ்திரியா, டென்மார்க் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதனை அடுத்து பிரான்ஸில் ஆட்சி அமைத்த லூயிஸ் பிளாங், பெண்களை அமைச்சரவை ஆலோசனை குழுவில் இணைத்ததுடன், அவர்களுக்கு வாக்குரிமை வழங்கவும் இணங்கினார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு 1848ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி நடைபெற்றது.

அதன் பின்னர் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் நடைபெற்ற பெண்களின் புரட்சிகளைக் கருத்தில் கொண்டு, மார்ச் மாதம் 8ஆம் திகதியைச் சர்வதேச மகளிர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.

“சகல பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் சமத்துவம், உரிமைகள் மற்றும் வலுவூட்டல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு மகளிர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments