சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
டெல்லியில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்தநிலையில் குறித்த இறுதிப்போட்டியியை காணவரும் இரசிகர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை மைதானத்திற்குள் கொண்டு வர வேண்டாம் என துபாய் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை மைதானத்திற்குள் கொண்டுவருபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மைதானத்திற்குள் கடுஞ்சொற்கள் பேசுவது, பிறர் புண்படும் விதமாக குறியீடுகள் காண்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.