இன்று, சனிக்கிழமை, மார்ச் மாதம் 8ஆம் திகதி காலை, 7.24 மணியளவில், பிக் பென் கோபுரத்தின் மீது, கையில் பாலஸ்தீன கொடியுடன் ஒருவர் ஏறுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு உருவானது. பரபரப்புக்குக் காரணம், பிக் பென் கோபுரம், பிரித்தானிய நாடாளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையின் வடக்கு முனையில் அமைந்துள்ளது என்பதுதான்.
அந்த நபர், வெறுங்காலுடன், கையில் பாலஸ்தீன கொடியுடன் பிக் பென் கோபுரத்தில் ஏறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
அந்த நபரை இன்னமும் அணுகமுடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அவரை கீழே இறக்கினால்தான், அவர் யார் என்பது குறித்த விவரங்கள் தெரியவரும்.