கனடாவின் ரொரன்றோவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் வரை காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரொரன்றோவிலுள்ள Scarborough ஷாப்பிங் மாலின் அருகிலுள்ள மதுபான விடுதி ஒன்றில் நேற்றிரவு 10.40 மணியளவில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
அதில் 12 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விடயம் என்னவென்றால், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் தலைமறைவாகிவிட்டார். பொலிசார் அவரை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.