இன்று (09) இரவு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் சிறிதளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்தவகையில், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பல இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 10 ஆம் ,11 ஆம் திகதிகளில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை தற்காலிகமாக மாற்றமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.