பிலியந்தலை பகுதியில் நபர் ஒருவரின் வீட்டிற்குள் அத்தமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டாரா கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து நேற்று (08) கைது செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.