கொழும்பு-குருணாகலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும், ஜீப் வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.