Wednesday, May 28, 2025
HomeMain NewsMiddle Eastசிரியாவில் வன்முறை - 1000 மேற்பட்டோர் பலி!

சிரியாவில் வன்முறை – 1000 மேற்பட்டோர் பலி!

சிரியாவின் பாதுகாப்புப் படையினருக்கும், முன்னாள் ஜனாதிபதி அல் ஆசாதின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 1000 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் முற்பட வேண்டுமென சிரியாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் ஒரு சிக்கலான சூழலில் நின்று கொண்டிருக்கிறோம். புதிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளோம்.

முன்னாள் ஆட்சியாளர்களுக்கு ஆதரவு தரும் அந்நியர்கள் புதிய கலவரத்தை உருவாக்கியுள்ளனர்.

நமது ஒற்றுமையை, ஸ்திரத்தன்மையைக் குலைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளதுள்ளார்.

மேலும் ,சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றும் வன்முறைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கலவரப் பின்னணி குறித்து முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டை நாம் பேண வேண்டுமெனவும் அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments