தாய்லாந்து – மியன்மாரில் இணையத்தள மோசடியில் சிக்கியிருந்த 549 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அவ்வாறு தாய்லாந்து – மியன்மார் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இணையத்தள பணமோசடி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதோடு இந்த மோசடி மையங்களை சீன நிறுவனங்கள் நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
மியன்மார், கம்போடியா, லாவோஸில் உள்ள மோசடி மையங்களில் வேலை செய்தவர்கள் , காதலித்து ஏமாற்றி பணம் பெறுவது , சட்டவிரோத சூதாட்டம் எனப் பல வழிகளில் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் மோசடியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது