இன்று (14) குரோதி வருடம் மாசி மாதம் 30 வெள்ளிக்கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகளைச் சந்திப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருக்கக்கூடிய சொத்து தகராறுகளைப் பேசி தீர்த்து கொள்வது நல்லது. பணியிடத்தில் உங்கள் வேலையில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழில் தொடர்பாக நீங்கள் செய்துள்ள முதலீடுகள் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் கிடைக்கக்கூடிய நாள். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகமாக நடக்கும். மரியாதை அதிகரிக்கும். தந்தையுடன் உறவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். புதிய வேலைக்கான முயற்சியில் நல்ல செய்திகளை கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் செலவு விஷயத்தில் கவனம் தேவை. மாணவர்கள் உயர்கல்விக்கான பாதை அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பயணம் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். அதன் மூலம் அனுகூல பலன்களை பெறுவீர்கள். காதல் துணையை வீட்டில் அறிமுகம் செய்வீர்கள். உங்களின் மீது நன்மைகள் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். தொழில் தொடர்பாக சிறிய லாபம் அமைப்புகள் பெறுவீர்கள். உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். இன்று உங்களுக்கு புரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பவர்களும், கடினமான நேரத்தில் பெற்றோரின் ஆலோசனை பெற தவறாதீர்கள். உடல்நலம் சற்று பாதிப்பை ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றத்திற்கான நாளாக இருக்கும். சில முக்கிய வேலைகளை முடித்து உற்சாகம் அடைவீர்கள். அரசாங்க தொடர்பான வேலைகள் முடிப்பதில் சிக்கல் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள். இன்று எதிர்பார்த்ததை விட அதிக பணம் செலவாகும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. உங்களின் முன்னேற்றத்தை கண்டு எதிரிகள் கூட பொறாமைப்படுவார்கள். குடும்பத்தில் சில சாதகமற்ற சூழல் இருக்கும். இன்று எந்த ஒரு செயலிலும் பொறுமையுடன் செயல்படவும். பிள்ளைகளின் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வித்துறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கக் கூடிய நாள். பணம் முதலீடு தொடர்பான விஷயத்தில் வல்லுநர்களின் ஆலோசனைக்குப் பின்னர் செயல்படவும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். காதலுக்கு குடும்ப உறுப்பினர்களின் அங்கீகாரம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். பெற்றோருடன் ஆன்மீக யாத்திரை செல்ல வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு பிடித்தமான சில பொருளை இழக்க வாய்ப்புள்ளது. அதனால் பயணம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. சகோதரர்களின் ஆதரவால் முக்கிய வேலைகளை செய்து முடிப்பீர்கள். இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டில், பணியிடத்திலும் உணர்ச்சிவசப்படக் கூடிய சூழலில் இருக்கும். அதனால் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் சாதகமான சூழல் நிலவும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலை தொடர்பாக சில நல்ல செய்திகள் கிடைக்கும். சந்தையில் முதலீடு தொடர்பான விஷயத்தில் இழப்புகளைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சில சொத்துக்கள் உங்களுக்கு கிடைத்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் கசப்பான சூழ்நிலை மாறும். பிள்ளைகளிடமிருந்து சில ஏமாற்றமான செய்திகளை பெறுவீர்கள். சொத்துக்கள் வாங்கும் விருப்பங்கள் நிறைவேறும். பெற்றோரின் உடல் நலனில் கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மன பதற்றம் தரக்கூடிய சூழல் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பணவரவு இருக்கும். பணியிடத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வெளியூர், வெளிநாடு தொடர்பான வேலை, தொழில் தொடர்பான விஷயத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வருமான ஆதாரங்கள் உருவாகும். எதிரிகளை கவனமாக கையாளவும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதில் எச்சரிக்கை தேவை. பிள்ளைகளின் தேவை, கல்வி தொடர்பாக செலவுகள் ஏற்படும்.