பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தினை அடுத்த மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த அறிக்கை மீதான முதல் நாள் விவாதம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
அத்துடன், இரண்டாவது நாள் விவாதம் எதிர்வரும் மே மாதத்தில் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கான உரிய திகதி இறுதி செய்யப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல் ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலைத் தொடர்ந்து நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.