2025 ஆம் ஆண்டுக்கான இந்திய ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்காக தசுன் ஷானக்க விளையாடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து அணி வீரர் ஹரி ப்ரூக் குறித்த தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு மாற்று வீரராக தசுன் ஷானக்க உள்வாங்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ILT20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அவர் இவ்வாறு அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.