2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உம்ரான் மாலிக் வெளியேறியுள்ளார்.
காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவருக்கு மாற்று வீரராக சேதன் சக்காரியா அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.