கனடாவில் Post-Graduation Work Permit விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.
Post-Graduation Work Permit (PGWP) குறித்த புதிய மாற்றத்தின்படி, கனடாவில் இப்போது பட்டம் பெற்ற அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் வேலை அனுமதி (Work Permit) பெற வாய்ப்பு கிடைக்கிறது.
இதன்மூலம், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் பணியாற்றும் திறனைக் கூர்மைப்படுத்தி, கனடாவில் தங்கும் வாய்ப்பைப் பெற முடியும்.
புதிய விதிகள் மற்றும் தகுதிகள்
2024-ஆம் ஆண்டிற்கு முன்பு, PGWP பெற கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மட்டுமே பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடு இருந்தது.
இனி, எந்தவொரு பட்டம் பெற்றவரும் (bachelor’s, master’s, doctoral) PGWP-க்கு விண்ணப்பிக்கலாம்.
கனடாவில் PG Work Permit விதிகள் தளர்வு | Canada Work Permit Rules Pgwp Eligibility Expands
Work Permit-க்குத் தேவையான மொழித் திறன் (Language Proficiency) நிலை:
பல்கலைக்கழக பட்டதாரிகள் – CLB 7 அல்லது NCLC 7
கல்லூரி பட்டதாரிகள் – CLB 5 அல்லது NCLC 5
இந்த புதிய விதிகள் 2024 நவம்பர்-1க்கு பிறகு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பொருந்தும்.
புதிய கட்டுப்பாடுகள்
2024 நவம்பர் 1-க்கு முன்பு படிப்பு தொடங்கிய மாணவர்கள் – முந்தைய பாடப்பிரிவு கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
Flight school பட்டதாரிகள் – எந்தவொரு மொழித் திறன் தேவை இல்லாமல் PGWP-க்கு தகுதி பெறலாம்.
2024 மே 15-க்கு பிறகு curriculum licensing agreements உடைய சில பாடத்திட்டங்கள் – PGWPக்கு தகுதியற்றதாக கருதப்படும்.
வேலை அனுமதி காலம்
PGWP-ன் நீளம் படிப்பின் கால அளவைப் பொறுத்தது.
8 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள்: வேலை அனுமதி படிப்பின் நீளத்துக்கு சமமாக இருக்கும்.
2 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகம்: மூன்று ஆண்டுகள் வரை வேலை அனுமதி பெறலாம்.
Multiple eligible programmes முடித்திருந்தால், அதிக கால வேலை அனுமதி பெற வாய்ப்பு.
இந்த மாற்றங்கள், கனடாவில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கு மிகப்பெரிய பயனளிக்கும்.
திறமையான வெளிநாட்டு பட்டதாரிகளை தக்கவைத்துக்கொள்ளும் கனடாவின் முயற்சியில் இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகவும்.