Saturday, April 19, 2025
HomeMain NewsSri Lankaநாகலகம் வீதி துப்பாக்கிச் சூடு குறித்து வௌியான தகவல்

நாகலகம் வீதி துப்பாக்கிச் சூடு குறித்து வௌியான தகவல்

கிரேன்ட்பாஸ், நாகலகம் வீதி பகுதியில் நேற்றிரவு (17) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

காயமடைந்தவர்கள் 22 மற்றும் 28 வயதுடைய கிரேன்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்​.

காயமடைந்தவர்களின் நிலைமை பாரதூரமானதல்ல என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சந்தேக நபர்களை கைது செய்ய கிரேன்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments