குரங்குகள் பயிர் நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, பயிர் செய்யப்பட்ட நிலங்களை சுற்றி சிறுத்தையின் சிறுநீரைத் தெளிப்பது குறித்து விவசாயத் துறை கவனம் செலுத்தியுள்ளது.
விவசாய நிலங்களுக்குள் குரங்குகள் நுழைவதைத் தடுக்க சிறுத்தை சிறுநீரை விரட்டியாகப் பயன்படுத்தலாம் என்று விவசாய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாசனை குரங்குகள் மற்றும் பபூன்கள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்கிறது என்றும், சிறுத்தை போன்ற வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த சூழ்நிலையால், சிறுத்தையின் சிறுநீர் போன்ற ரசாயனத்தை செயற்கையாக உற்பத்தி செய்து,இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சாகுபடி நிலங்களில் தெளிப்பதன் மூலம், எலிகள் மற்றும் குரங்குகளின் வரவை குறைக்க முடியும் என்றும், இதுபோன்ற செயற்கை ரசாயனங்கள் உலகெங்கிலும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அந்த அதிகாரி கூறினார்.
மேலும், வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள கிராமங்களுக்குள் குரங்குகள் நுழைவதைத் தடுக்க, வனத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான எல்லையில் நாய்களை நிறுத்துவது விவசாயத் துறை கவனம் செலுத்தியுள்ளது.