Tuesday, May 13, 2025
HomeMain NewsAmerica250 கிலோ எடை கொண்ட டிவிட்டர் இலச்சினை : ஏலத்தில் விட முடிவு...!

250 கிலோ எடை கொண்ட டிவிட்டர் இலச்சினை : ஏலத்தில் விட முடிவு…!

ட்விட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்விட்டர் நிறுவனத்தைத் தொழிலதிபர் ஈலோன் மஸ்க் கொள்வனவு செய்தபின் ‘எக்ஸ்’ எனப் பெயர் மாற்றம் செய்தார்.

அதைத்தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்தநிலையில், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த ட்விட்டர் நிறுவனத்தின் நீல நிறப் பறவை இலச்சினை ஏலத்திற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏலத்தின் ஆரம்ப விலையாக 21,664 டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏலம் எடுப்பவர்கள், இலச்சினையை எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டும் என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இலச்சினை 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்டது.

இந்த ஏலம் மார்ச் 20ஆம் திகதி வரை நடைபெறும் என்றும், அதன் பிறகு அதிக தொகை கோரியவர்களுக்கு இந்த இலச்சினை வழங்கப்படும் எனவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments