இந்தியாவின் நாக்பூரின் சில பகுதிகளில், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முகலாய ஆட்சியாளரின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையால் தூண்டப்பட்ட மோதல்களின் காரணமாகக் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய இந்தியாவில் கடந்த திங்களன்று இடம்பெற்ற வன்முறைகள் காரணமாகப் பல வாகனங்கள் சேதமடைந்ததுடன் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் நாக்பூரின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவின் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், சட்டம் ஒழுங்கை பராமரிக்க அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் அங்கு வன்முறைகள் மோசமடைந்ததையடுத்து நாக்பூரின் சில பகுதிகளில், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.