Friday, May 2, 2025
HomeMain NewsAmericaடொனால்ட் ட்ரம்பை ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின்

டொனால்ட் ட்ரம்பை ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன்(Donald Trump) தொலைபேசியில் உரையாட நேரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசி உரையாடலுக்கு அவர் தாமதமாகிறார் என்பதை அதிகாரிகள் எச்சரித்தும், விளாடிமிர் புடின் ஒரு சிரிப்புடன் அதை புறந்தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

ட்ரம்புடன் தொலைபேசி உரையாடல்
உக்ரைன் போர் தொடர்பில் விவாதிக்க ட்ரம்ப் அனுப்பிய தூதர் ஒருவரை சந்திக்க விளாடிமிர் புடின் சுமார் 8 மணி நேரம் தாமதப்படுத்தியுள்ளார்.

மொஸ்கோவில் தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களிடம் நேரிடையாக பேசும் வருடாந்திர ரஷ்ய நிகழ்வில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.

ரஷ்ய நேரப்படி மதியத்திற்கு மேல் 4ல் இருந்து 6 மணிக்குள் ட்ரம்புடன் தொலைபேசி உரையாடலுக்கு புடின் ஒப்புக்கொண்டிருந்தார்.

ஆனால் அதற்கு முன்னதாக தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களிடம் நேரிடையாக பேசும் நிகழ்ச்சிக்கும் புடின் ஒப்புக்கொண்டிருந்தார்.

காத்திருக்க வைத்த புடின்

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ட்ரம்புடன் பேச ஜனாதிபதி மாளிகைக்கு திரும்ப வேண்டும் என அவர் அவசரப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

மாலை 4 மணியைத் தாண்டியபோது நிகழ்ச்சியை நடத்தும் அலெக்சாண்டர் ஷோகின் என்பவர் ஜனாதிபதி புடினிடம் அது குறித்து பேசுகிறார்.

டொனால்ட் ட்ரம்பை ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் | Trump Waited 1 Hour For Putin S Call

6 மணிக்கு முன்னர் ட்ரம்புடன் தொலைபேசி உரையாடல் முடிவு செய்துள்ளதாக குறிப்பிடுகிறார். அப்போதும் புடின் அவசரப்படவில்லை என்றும், கடைசியில் மாநாட்டில் இருந்து வெளியேறி, ஜனாதிபதி மாளிக்கைக்கு அவர் வந்து சேரும் போது மாலை 5 மணி என்றே கூறப்படுகிறது.

தாமதப்படுத்தி வருகிறார் அதாவது ட்ரம்புடன் உரையாடலுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக அவர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதி ட்ரம்பை அவர் தொடர்பு கொண்டுள்ளார்.

போர் நிறுத்தத் திட்டம்

அமெரிக்கா உக்ரைனுடன் ஒப்புக்கொண்ட 30 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை விளாடிமிர் புடின் இதுவரை ஏற்கவில்லை. இந்த உரையாடலில் புடினை ஒப்புக்கொள்ள வைக்க தமக்கு கிடைத்த வாய்ப்பு இதுவென ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், ட்ரம்பிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்காக புடின் போர் நிறுத்தத் திட்டத்தை தாமதப்படுத்தி வருகிறார் என்றே கூறப்படுகிறது.

மேலும், 2014ல் ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பிரதேசமான கிரிமியாவை இனிமேல் ரஷ்ய பகுதி என ட்ரம்ப் ஆதரிப்பார் என்றே கூறப்படுகிறது.

ஆனால், உக்ரைன் தரப்பில் அதை ஏற்றுக்கொள்வார்களா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும் என கூறப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments