Saturday, April 12, 2025
HomeMain NewsEuropeஉக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் யூரோ உதவி- ஜேர்மனி அறிவிப்பு

உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் யூரோ உதவி- ஜேர்மனி அறிவிப்பு

உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் யூரோ உதவி வழங்குவதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.

ஜேர்மனி, 2025-ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் யூரோ உதவி வழங்க உள்ளதாக, அந்த நாட்டின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அன்னலேனா பேர்பொக் (Annalena Baerbock) தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், 2025-ஆம் ஆண்டில் ஜேர்மனியின் மொத்த உதவி 7 பில்லியன் யூரோவாக உயரவுள்ளது.

“நாட்டின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகளுடன், உக்ரைனுக்கு கூடுதல் 3 பில்லியன் யூரோ வழங்குவதும் முக்கியம்” என்று அமைச்சர் பேர்பொக் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் யூரோ உதவி- ஜேர்மனி அறிவிப்பு | Germany Adds 3 Billion In Aid To Ukraine In 2025

மேலும், ஜேர்மனியின் அரசியலமைப்பை மாற்றுவதற்கான திட்டமும் உள்ளது, இது தேசிய கடன்களை அதிகரிக்கவும், பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் நிதி வழங்கவும் உதவும்.

ஜேர்மனி, 2025 முதல் அரையாண்டில் பாதுகாப்பு அமைப்புகள், டாங்கிகள், மற்றும் ஹவிட்சர் ஆகியவை அடங்கிய பாரிய ராணுவ உதவித் திட்டங்களை வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments