Friday, April 18, 2025
HomeSportsஅன்று விராட் கோலியுடன் விளையாடியவர் - 2025 ஐ.பி.எல்.-இல் அம்பயர்

அன்று விராட் கோலியுடன் விளையாடியவர் – 2025 ஐ.பி.எல்.-இல் அம்பயர்

விளையாட்டுத் துறையில் எதுவும் நடக்கலாம். 2008ம் ஆண்டு ஐ.சி.சி. நடத்திய அண்டர் 19 (U19) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. அன்று தொடங்கி விராட் கோலியின் இன்று சர்வதேச கிரிக்கெட் இதுவரை கண்டிராத தலைசிறந்த வீரராக உருவெடுத்துள்ளார்.

எனினும், அண்டர் 19-இல் விராட் கோலியுடன் விளையாடிய அனைவரும் இன்று கிரிக்கெட் துறையில் சாதனையாளர் ஆகிவிடவில்லை. எனினும், விராட் கோலி தற்போது 18-வது ஐ.பி.எல். தொடரில் விளையாட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிக்காக உள்ளார். இந்த நிலையில், அண்டர் 19 இந்திய அணியில் தன்னுடன் விளையாடிய தன்மே ஸ்ரீவஸ்தவா விரைவில் தொடங்க இருக்கும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் அம்பயராக களமிறங்குகிறார்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, தன்மே ஸ்ரீவஸ்தவா தனது 35-வது வயதில் இருந்து அம்பயரிங் செய்து வருகிறார். இவர் 2008-ம் ஆண்டு நடந்த ஐ.சி.சி. அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு அதிக ஸ்கோர் அடித்த வீரராக திகழ்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் விளையாடினார்.

அம்பயரிங் செய்வது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தன்மே ஸ்ரீவஸத்வா கூறும் போது, “நான் தலைசிறந்த வீரராக இருந்ததை புரிந்து கொள்கிறேன். ஒருகட்டத்தில் ஐ.பி.எல். விளையாட முடியுமா என்ற சூழல் உருவானது. அப்போது, தொடர்ந்து வீரராக விளையாட வேண்டுமா அல்லது வெற்றிகரமாக இரண்டாவது இன்னிங்ஸில் கவனம் செலுத்த வேண்டுமா என முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments