Sunday, May 4, 2025
HomeHealthபுற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் உணவுகள்!

புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் உணவுகள்!

உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயகரமான நோயாக புற்றுநோய் உள்ளது. ஆனால் புற்றுநோயை அதன் ஆரம்பத்திலேயே கண்டறியும்போது குணப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பலவித புற்றுநோய்கள், எதனால் ஏற்படுகின்றன என்பது இன்று வரை அறுதியிட்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், சில வகை உணவுகள், புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த உணவுகள் பற்றி…

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள்:

கேனில் அடைக்கப்பட்ட பானங்களில் மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பிஸ்பெனால் ஏ என்ற வேதிப் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கார்பனேற்ற குளிர்பானங்கள்:

கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இதனால் கணைய புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹைட்ரஜனேற்ற எண்ணெய்:

உணவுகள் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனேற்ற எண்ணெய்கள், பிரீ ரேடிக்கில்களை வெளியிடுகின்றன. இது புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

‘மைக்ரோவேவ்’ பாப்கார்ன்:

மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்னில், பெர்ப்ளூரோக் டானாயிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக்கூடியதாக கருதப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை:

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இன்சுலின் அளவை அதிகரிக்கக் கூடியது. இதனால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டலாம்.

பதப்படுத்திய இறைச்சி:

பேக்கான், சாசேஜ் போன்ற பதப்படுத்திய இறைச்சி வகைகளில் அவை கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் பிரிசர்வேட்டிவ்களுடன், நைட்ரேட்கள் உள்ளன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் ஆகும்.

சிவப்பு இறைச்சி:

‘சிவப்பு இறைச்சி’ எனப்படும் விலங்கு இறைச்சியை அதிகம் உட்கொள்வது. குடல் புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கலாம்.

ஊறுகாய்:

ஊறுகாய்களில் அதிகளவில் சோடியம் உள்ளது. எனவே மிகக் குறைந்த அளவே ஊறுகாய் உபயோகிப்பது நல்லது. ஊறுகாய் அதிகளவு உட்கொள்வது, வயிற்றில் புற்றுநோய் ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிட்ட இறைச்சி:

புகையில் சமைக்கப்பட்ட இறைச்சி, மீன் போன்றவற்றில் பாலிசைக்கிளிக் என்ற மணம் நிறைந்த ஹைட்ரோ கார்பன்கள் உள்ளன. இது வயிறு புற்றுநோயை ஏற்படுத்தலாம்.

கருவாடு:

உப்பிட்டு தயாரிக்கப்படும் மீன் கருவாட்டில், நைட்ரோசாமைகள் உள்ளன. இவை மூக்கில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.

மேற்கண்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க முடியாவிட்டாலும், முடிந்த அளவு குறைத்துக் கொள்வது புற்றுநோய் அபாயத்தை வெகுவாக குறைக்க உதவும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments