Saturday, May 3, 2025
HomeMain NewsAmericaசுனிதா வில்லியம்ஸ் தங்கியிருந்த சர்வதேச விண்வெளி மையம் - இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருந்த சர்வதேச விண்வெளி மையம் – இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது சர்வதேச விண்வெளி நிலையம். அமெரிக்கா, ரஷ்யா, ஐப்பான், ஐரோப்பா, கனடா விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் சர்வதேச விண்வெளி நிலையம் உருவானது.

விண்வெளி நிலையத்துக்கான பயணத்தை சர்வசே விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு (2024) ஜூன் 5-ந்தேதி தொடங்கினார். 8 நாட்களில் திரும்பி வருவது போல் திட்டமிடப்பட்டிருந்த அவரது பயணம் 9 மாதங்களாக நீடித்தது.

அவர் கடந்த 9 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தார். சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருந்த விண்வெளி நிலையத்தின் மொத்த நீளம் 356 அடி ஆகும். அதன் எடை 4.19 லட்சம் கிலோ கிராம்.

ஒரு பெரிய இரண்டு மாடி வீட்டின் பரப்பளவை கொண்ட அங்கு 7 அறைகள், 2 குளியலறைகள், ஒரு உடற்பயிற்சி கூடம், 360 டிகிரி பார்க்கக்கூடிய பெரிய ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவைகள் இருக்கும்.

விண்வெளி நிலையத்தில் 7 பேர் தங்கலாம். தேவைப் பட்டால் மேலும் பலரும் தங்கும் வகையில் வடிவ மைக்கப்பட்டுள்ளது. ஒரு தொலைபேசி பூத் அளவுள்ள சிறிய தூக்க பெட்டிகள் உள்ளன. இவற்றில் தான் விண்வெளி வீரர்கள் தூங்குவார்கள். ஈர்ப்பு விசை இல்லாததால் இந்த முறை எந்த அழுத்தத்தையும் உருவாக்காதுஇந்த பெட்டியில் தூக்கப்பை, தலையணை, விளக்கு, காற்று திறப்பு, மடி கணிணி மற்றும் தனிப்பட்ட பொருட்கள் வைப்பதற்கான இடம் உள்ளது. காற்று துவாரத்தின் அருகே தலை வைத்து தூங்க வேண்டும். அப்படி தூங்காவிட்டால் தங்கு பவர்கள் வெளி யேற்றும் காற்றில் கார்பன்டைஆக்சைடு அதிகரித்து அது உயிருக்கு ஆபத்தானதாக மாறும்.

தூக்கத்தின் போது சத்தம் மற்றும் ஒளியை தடுக்க காது அடைப்பான்கள் மற்றும் தூக்க முகமூடிகள் பயன் படுத்தப்படும். தினமும் 8.5 மணி நேரம் தூங்க வேண்டும் என்பது தான் பரிந்துரை.

உணவு தயாரிக்க தனி இடம் இருக்கிறது. அங்கு சூடான நீர் குழாய் மற்றும் உணவை சூடாக்கும் அமைப்பு உள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறை உணவு ஆலைக்கு வந்து சேரும். ஒவ்வொரு பயணி யின் சுவை, விருப்பம் மற்றும் ஊட்டச்சத்து தேவை களுக்கு ஏற்ப உணவ வழங்கப்படுகிறது.

பயணிகள் புறப்படு வதற்கு 5 மாதங்களுக்கு முன்பு ஒரு மெனுவை சமர்ப்பிக்க வேண்டும். இறைச்சி மற்றும் முட்டைகள் தரையில் சமைக்கப்பட்டு ஆலைக்கு வழங்கப்படுகிறது. அது பின்னர் சூடாக்கி பயன்படுத்தப்படும். கறி, சூப், குழம்பு போன்ற உணவு கள் உலர்த்தப்பட்டு பொடி யாக்கப்படுகின்றன. அவற்றை தண்ணீர் சேர்த்து உண்ணக்கூடியதாக மாற்று வார்கள்.
மது மற்றும் பிற போதை பொருட்கள், புகை பிடித்தல் கூடாது. பூமியில் உள்ள மனிதர்களை விட விண்வெளி பயணிகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஆகவேஒவ்வெரு நபரும் தினமும் 1.2 கிலோ உணவு சாப்பிடுவார்கள். இந்த விண்வெளி நிலை யத்தில் தான் சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களாக வசித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments