இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர்ந்தோர்களை ஏற்றிச்சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் 40 பேர்வரை காணாமல் போயுள்ளதாகவும், இதுவரை 10 பேரை மீட்டுள்ளதாகவும், இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலியில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு விபத்து | Boat Carrying Migrants Sinks In Italy
ஏனையவர்களைத் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இத்தாலியக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
துனிசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு 56 பயணிகளுடன் குறித்த கப்பல் பயணித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், கடல் அலையின் வேகம் அதிகரித்ததால் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் நிலவுவதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.