ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொலையுடன் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இன்று வெள்ளிக்கிழமை (21) ‘ஸ்கைப்’ தொழில்நுட்பத்தின் மூலம் நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில், ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.