Thursday, May 1, 2025
HomeMain NewsOther Countryஊசியால் வந்த வில்லங்கம் : 18,000 டொலர் இழப்பீடு..!

ஊசியால் வந்த வில்லங்கம் : 18,000 டொலர் இழப்பீடு..!

விமானத்தில் விட்டுச் செல்லப்பட்ட ஊசி தம்மைக் குத்தியதால் நபர் ஒருவர் 18,000 டொலர் இழப்பீடு கோரியுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த அவர் ஊசி குத்தியதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சுவதாகவும் அதற்காகவே இழப்பீடு கேட்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சீனா சௌதர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த அவர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது தம்முடைய கைத்தொலைபேசியை எடுக்க முயன்ற போது அவரின் விரலில் ஊசி ஒன்று குத்தியது. அது இன்சுலின் (insulin) ஊசியாக இருக்கலாம் என்று அந்த நபர் சந்தேகிக்கின்றார்.

விமான ஊழியர்கள் அவருக்கு உதவிய போதிலும் அந்தச் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்தவர் ஒருவர் அந்த ஊசியை விட்டுச்சென்றது பிறகு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, விமானம் தரையிறங்கியவுடன் அவருடைய விமானச்சீட்டிற்கு 250 டொலரும் நடந்த சம்பவத்திற்குக் கூடுதலாக 138 டொலரும் விமான நிறுவனம் வழங்க முன்வந்தது.

ஆனாலும் அது போதாது என்று கூறி அந்த நபர் 18,000 டொலர் இழப்பீடு கேட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments