Monday, April 21, 2025
HomeSportsநாளை ஆரம்பிக்கும் ஐபிஎல் திருவிழா விதிகளில் அதிரடி மாற்றம்..!

நாளை ஆரம்பிக்கும் ஐபிஎல் திருவிழா விதிகளில் அதிரடி மாற்றம்..!

ஐபிஎல் 2025 சீசனில் பல விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளன.

மூன்று பந்துகள் :

மும்பையில் நடந்த அணித்தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு, ஐபிஎல் 2025க்கான முக்கிய விதி மாற்றங்களை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரே போட்டியில் மூன்று பந்துகளை பயன்படுத்தும் விதியை பிசிசிஐ அமல்படுத்தியுள்ளது.

இந்த விதியின்படி, இரண்டாவது இன்னிங்சில் 11வது ஓவர் முதல் அந்தப் போட்டியின் 3வது பந்தை பயன்படுத்த முடியும்.

இதன்மூலம் இரண்டு பந்துகளை 2வது இன்னிங்சில் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனினும், நடுவர்தான் புதிய பந்தை மாற்றுவது குறித்த இறுதி முடிவை எடுப்பார்.

உமிழ்நீர் தடை நீக்கம் :

வீரர்கள் மீண்டும் பந்தில் உமிழ்நீரைப் பூசலாம். இந்த தடை 2020யில் முதலில் அமுல்படுத்தப்பட்டது. அணித்தலைவர்கள் ஒப்புக்கொண்ட பின் இம்முடிவு எடுக்கப்பட்டது.

மெதுவாக ஓவர்கள் வீசினால் தடையில்லை. மெதுவான ஓவர்-ரேட்டுக்கு அணித்தலைவர்களுக்கு தடை செய்யப்பட மாட்டார்கள்.

அதற்கு பதிலாக, அவர்கள் தகுதி இழப்பு புள்ளிகள் மற்றும் அபராதங்களைப் பெறுவார்கள். அதேபோல் அகலப்பந்துகளுக்கு (Wides) டிஆர்எஸ் (DRS) விரிவாக்கப்பட்டது. ‘height wides’ஐ மதிப்பாய்வு செய்ய DRSயை இப்போது பயன்படுத்தலாம்.

அதேபோல் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே உள்ள Widesக்கும் DRSஐ பயன்படுத்தலாம்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments