Thursday, April 10, 2025
HomeMain NewsEuropeநாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஆயிரக்கணக்கான சுவிஸ் குடும்பங்கள்..!

நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஆயிரக்கணக்கான சுவிஸ் குடும்பங்கள்..!

சுவிட்சர்லாந்தில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேற விரும்புகிறார்கள்.

Comparis என்னும் இணையதளம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஆயிரக்கணக்கான சுவிஸ் குடும்பங்கள் சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேற விரும்புவது தெரியவந்துள்ளது.

அவர்கள் செல்ல விரும்பும் நாடு பிரான்ஸ்! சுவிஸ் குடும்பங்களில் 5 சதவிகிதம், அதாவது 51,000 குடும்பங்கள் பிரான்சுக்குச் சென்று குடியேற விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

அதற்கு முக்கிய காரணம், பிரான்சில் நிலவும் விலைவாசி. அத்துடன், அங்கு வீடுகள் விலையும் குறைவாக உள்ளதுடன், வாழ்க்கைத்தரமும் சிறப்பாக இருக்கும் என நம்புவதால், சுவிஸ் மக்கள் பலர் பிரான்சில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், வேலைக்கு சுவிட்சர்லாந்துக்கு வரவேண்டுமே. அத்துடன், இத்தனை ஆண்டுகளாக பழகிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிரியவும் அவர்களுக்கு கஷ்டமாக உள்ளதாம்.

என்றாலும், ஆய்வில் பங்கேற்றவர்களில் 70 சதவிகிதம் பேர், நாங்கள் பிரான்சுக்கு குடிபெயர விரும்புகிறோம், ஆனால், எங்களுக்குத் தெரிந்த சிலர் ஏற்கனவே பிரான்சுக்கு குடிபெயர்ந்துவிட்டது எங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments