ஆண்டுதோறும், மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச நீர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடன் மார்ச் 22 என்பது உலக நீர் தினம் எனத் தீர்மானிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது
நாளாந்தம் பெரும் சவாலாக அமைந்து வருகின்ற நீர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்ப்பதே உலக நீர் தினம் கொண்டாடப்படுவதன் பிரதான நோக்கம் ஆகும்.
நாடுகளின் புவியியல் அமைப்புக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
2030 ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதை இலக்காகக் கொண்ட ‘ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு 6ஐ நோக்கியே, இந்த சர்வதேச நீர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
1992ஆம் ஆண்டு, ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் போது முதன்முதலில், சர்வதேச நீர் தினம் பற்றிய யோசனை பரிந்துரைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதலே, மார்ச் 22ஆம் திகதியை சர்வதேச நீர் தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.
2025 ஆம் ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள் “பனிப்பாறை பாதுகாப்பு” என்பதாகும்.