குடும்ப தகராறு காரணமாக ரத்தோட்டை இன்று (22) அதிகாலை கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டி கொலை செய்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மாத்தளை வைத்தியசாலையில் துப்புரவுத் தொழிலாளியாகவும், கணவர் அதே வைத்தியசாலையில் தாதியராகவும் கடமையாற்றுகின்றனர்.
கணவர் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றதாகவும், தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தனர்.