அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள 5.32 லட்சம் பேருக்கான சட்டப்பாதுகாப்பை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு சபை ரத்து செய்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதிக்குள் தொடர்புடைய குடியேறிகளின் அனுமதிகளை ரத்து செய்து, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.