இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.
இதன்படி பிற்பகல் 3.30 க்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதேவேளை சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள மற்றுமொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் ஐபிஎல் வரலாற்றில் கடந்த 12 ஆண்டுகளாக தனது தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றதில்லை.
எனவே குறித்த ஆட்டத்தில் வெற்றி பெற்று குறித்த தோல்விகளுக்கு மும்பை அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் இரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மும்பை அணி இறுதியாக கடந்த 2012ஆம் ஆண்டு தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றி கண்டிருந்தது.
அதன் பின்னர் அனைத்து தொடர்களிலும் தனது தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.