சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்திய தெலுங்கு நடிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் மீது தெலுங்கானா காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா காவல்நிலையத்தில் இவ்வாறு முறைப்பாடளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் குறித்த சூதாட்ட செயலிகளை பயன்படுத்திய பலரும் தனது பணத்தை இழந்துள்ளதாகவும், நானும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் பிரபலங்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளை விதிகளை மீறி விளம்பரப்படுத்துகிறர்கள்.
இதனால் பணத்தேவை உடையவர்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றப்படுகிறார்கள்.
இதனை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் பெரிய அளவில் பணத் தொகையை பெற்றுக்கொள்கிறார்கள்.
எனவே சட்ட விரோதமாக இந்த செயலிகளை பிரபலப்படுத்தும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.