பிரபல இந்திய பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கும், நடிகை ரியா சக்கரபோர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்நாட்டு சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலை என்பதை சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள சிபிஐ, மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என கூறியுள்ளது.
இதன்படி, நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் உத்தியோகப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர்களுக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14, 2020 அன்று தனது மும்பை வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.