பாகிஸ்தானின் சிந்த் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் தட்டம்மை நோயினால் 17 குழந்தைகள் உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 8 ஆம் திகதி வரை தட்டம்மை பாதிப்பு பற்றி சிந்த் சுகாதார துறை கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.
இதில், 1,100க்கும் மேற்பட்டோர் தட்டம்மை நோய்ப் பாதிப்புக்குள்ளானது தெரிய வந்தது.
இந்த நிலையில், காயிர்பூர் மாவட்டத்தில் 10 குழந்தைகள் இந்த நோயினால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கராச்சியில் கடந்த 2 மாதங்களில் மொத்தம் 550 குழந்தைகள் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.